பரமக்குடி,ஆக.14: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை, போகலூர் மேற்கு ஒன்றியம் பொட்டி தட்டியில் முருகேசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கும், தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட போகலூர் மேற்கு ஒன்றியம் பொட்டிதட்டி கிராமத்தில் எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள். நியாய விலை கடை விற்பனையாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement