தொண்டி, அக்.13: தொண்டி அருகே உள்ள முகிழ்த்தகம் கிராமத்தில் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். முகிழ்த்தகம் கிராமத்தில் உள்ள நீலாவதி, பூ மாதேவி சமேத சொர்ணவர்ஷம் பெய்த பெருமாள் கோயிலில் 50ம் ஆண்டு புரட்டாசி திருவிழா நடைபெற்றது.
விநாயகர் கோயிலிருந்து பால்காவடி, வேல் காவடி எடுத்த பக்தர்கள் கோயிலின் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். முன்னதாக பெருமாளுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உட்பட 12 வகை அபிஷேகம் நடைபெற்றது. பெருமாள் கோயிலில் பூக்குழி இறங்குவது இந்த கோயிலில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.