தொண்டி, அக்.13: தொண்டி பகுதியில் அதிகளவில் மணல் திருட்டு நடப்பதாக தொடர் புகாரின் அடிப்படையில் ரோந்து சென்ற போலீசார் 3 வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொண்டி அருகே உள்ள விருசுழி ஆற்றில் இரவு நேரத்தில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுவதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தொண்டி போலீசார் ரோந்து சென்ற போது ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் வாகனங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் விரட்டி ஒரு வாகனத்தை மட்டும் பிடித்தனர். கொடி பங்கு விஏஒ லெட்சுமிகாந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எட்டுகுடி ராஜசேகரன், தொண்டி தெற்கு தோப்பு சுதர்சன், சின்னத் தொண்டி பழனிவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.