தொண்டி, செப்.13: கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் மும்முனை சந்திப்பாக தொண்டி செக்போஸ்ட் பகுதி உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி அதிக அளவில் பேனர் வைக்கப்பட்டு வந்தது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதநிலை ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் வாகனங்கள், மதுரையிருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கின. இதனால் இப்பகுதியில் பேனர்கள் வைப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழிலும் வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக தொண்டி காவல் துறை சார்பில், தற்போது அப்பகுதியில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement