பரமக்குடி, செப்.13: பரமக்குடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (42). விவசாயி. நேற்று மதியம் எமனேஸ்வரம் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் குளிக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்தனர். அவருடைய உடைகள் கரையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குளத்திற்குள் இறங்கி தேடினர். அப்பொழுது தண்ணீருக்குள் மூழ்கி இறந்த நிலையில் அவர் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement