ராமநாதபுரம், செப்.13: பஞ்சமியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹி அம்மன் கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆவணி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கையில் உள்ள சுயம்பு மஹா வராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மஞ்சள், கிழங்குகள், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க முலாம் கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மன் காப்பு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டது. பெண் பக்தர்கள் மஞ்சள் அரைத்து, அம்மனுக்கு காப்பு செலுத்தியும், விளக்கேற்றியும் வழிபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement