தேவகோட்டை, நவ. 11: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் தமிழ் அகராதியியலின் தந்தை வீரமாமுனிவரின் 346வது பிறந்தநாளை முன்னிட்டு கலை இலக்கிய பயிலரங்கம் நடைபெற்றது. முன்னாள் மாணவர் மன்ற இணை செயலாளர் ஜோ லியோ வரவேற்றார். தலைமையாசிரியர் சேவியர் ராஜ் தலைமை வகித்து பேசினார். பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா பயிலரங்ககை தொடங்கி வைத்தார். முதன்மை கருத்தாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கருத்தாளர்கள் மரக்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியை அந்தோணி சகாயமேரி, திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி உதவி பேராசிரியர் பெபிட்டோ விமலன் ஆகியோர் கட்டுரை, கவிதை, கதை, பேச்சு திறமைகளை வளர்த்து கொள்வது குறித்து பேசினர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

