தேவகோட்டை, நவ. 11: தேவகோட்டை கைலாசநாதபுரம் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நவ.8ம் தேதி முதல் கால யாக பூஜை தொடங்கப்பட்டது. நவ. 9ம் தேதி காலை 2ம் கால பூஜை, மாலை 3ம் கால பூஜை நடைபெற்றது. நேற்று காலை 4ம் கால யாக பூஜை தொடங்கப்பட்டு கோபூஜை, லட்சுமி பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூஜை செய்த புனித கலச நீரை சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும், சுப்ரமணியர் கோபுரம் மற்றும் பரிவார சுவாமி கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்து மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல், வீரவேல் கோஷங்கள் முழங்கி வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
+
Advertisement

