தொண்டி, நவ.11: தொண்டி அருகே பீரோவை உடைத்து 13 பவுன் நகை திருடு போனது பற்றி தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். தொண்டி அருகே உள்ள எம்.ஆர்.பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நதியா. இவர், நேற்று நூறு நாள் வேலைக்கு சென்று விட்டு வீடுக்கு வந்தார். அப்போது பூட்டியிருந்த வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 13 பவுன் நகை திருடு போய் உள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து புகாரின் அடிப்படையில் தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement

