பரமக்குடி, அக்.9:பரமக்குடி அருகே உள்ள பாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(42). 130க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்துள்ளார். இவர், நேற்று பார்த்திபனூர் மறிச்சிக்கட்டி பகுதியில், தன்னிடம் வேலை பார்க்கும் தென் பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார்(46) ஆகியோர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ததில், முத்துக்குமார் மீது மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ச்சியில் மயங்கி விழுந்த குமார், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
+
Advertisement