கமுதி, ஆக.8: கமுதியில் குறு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளை ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது. இந்த போட்டிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவர்களுக்கான 100 மீ, 200 மீ, 1500 மீ, ஓட்டம், தொடர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
+
Advertisement