ராமநாதபுரம், ஆக.8: ராமநாதபுரம் அருகே வழுதூர், வாலாந்தரவை, ஏந்தல், பட்டணம்காத்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள அம்மன்கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா நடந்தது. ராமநாதபுரம் அருகே வழுதூர் மாரியம்மன் கோயில் மற்றும் பட்டிணம்காத்தான் கருமாரியம்மன் கோயில் முளைக்கொட்டு திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி காப்புக் கட்டுதல், முத்து பரப்புதலுடன் துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடந்தது. இரவில் பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் மகிழ்ந்தனர். கடைசி நாளான நேற்று முன்தினம் காலையில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிப்பட்டனர். மாலையில் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து குளத்தில் கரைத்தனர். இதனை போன்று வாலாந்தரவை, ஏந்தல் உள்ளிட்ட ராமநாதபுரம்,திருப்புல்லாணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில முளைப்பாரி உற்சவ திருவிழா நடந்தது.
+
Advertisement