பரமக்குடி,நவ.7: பரமக்குடி அருகே பெருங்கரை கிராமத்தில் நாய்கள் கடித்து மான் உயிரிழந்தது. பரமக்குடி அருகே பெருங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் புள்ளி மான்கள் உள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் வசித்து வரும் புள்ளி மான்கள், அவ்வப்போது தண்ணீர் குடிப்பதற்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று பெருங்கரை கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் வந்த புள்ளிமான் ஒன்றை நாய்கள் விரட்டி கடித்துள்ளது. இதில் நான்கு வயது மதிப்புள்ள ஆண் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் மானை எடுத்துச் சென்றனர்.
+
Advertisement

