ராமநாதபுரம், நவ.6: தமிழகம் முழுவதும் 11 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 25 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, முதன்மை கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.பிரின்ஸ் ஆரோக்கியராஜ், முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்.ரெஜினி பணியிட மாறுதல் செய்யப்பட்டு, ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
+
Advertisement
