ராமநாதபுரம், நவ.6: ராமநாதபுரத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் உமாராணி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்க மாநிலச் செயலாளர் மல்லிகா, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்ட பொருளாளர் பாலயோகினி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பேசினர். இதில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement
