காரைக்குடி, அக்.4: காரைக்குடியை பொறுத்தவரையில் ஒருசில இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. எதிர் சாலையில் பயணித்தல், ஹெல்மெட் அணியாமல் பயணித்தல், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்துதல் போன்றவற்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுகிறது. ஆகையால் போலீசார் விதிமுறைகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement