சிவகங்கை, அக்.4: சிவகங்கை மாவட்டத்தில் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டு குறுவை சாகுபடி பருவத்தில் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்த இளையான்குடி, காளையார்கோவில், மனாமதுரை, திருப்புவனம் வட்டாரங்களில் காப்பீடு செய்த 7,348 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இளையான்குடி வட்டாரத்தில் 7,202 விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 14 லட்சத்து 20 ஆயிரத்து 258ம், காளையார்கோவில் 119 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 35 ஆயிரத்து 325ம், மானாமதுரை 17 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 996ம், திருப்புவனம் 10 விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 633ம் உள்பட மொத்தம் ரூ.4 கோடியே 24 லட்சத்து 38 ஆயிரத்து 213 விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கூடுதல் விபரம் அறிய விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி அறிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement