சாயல்குடி. அக். 4: தேனி மாவட்டத்தில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழும போட்டியில் தமிழகம் அணி சார்பில் குத்துச்சண்டை போட்டிக்கான தமிழக வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 19 வயது பிரிவில் முதுகுளத்தூரை சேர்ந்த மாணவி லத்திகாகரன் தங்கம் வென்றார். இதனையடுத்து கர்நாடகாவில் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தேர்ச்சி தகுதி பெற்றார். இம்மாணவி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு விளையாட தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர் பாஸ்கரன் ஆகியோரை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலரும் பாராட்டினர்.
+
Advertisement