காரைக்குடி, ஆக. 1: காரைக்குடி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட போஸ்ட் ஆபீஸ்கள் நாளை (ஆக. 2) செயல்படாது என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, இந்திய அஞ்சல் துறையின் ஐடி மற்றும் 2.0 சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டு வரும் 4ம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய சாப்ட்வேர் செயல்பாட்டில் க்யூஆர் குறியூட்டின் மூலமாக பணம் செலுத்துதல் உள்பட பல்வேறு டிஜிட்டல் சேவைகள் கொண்டு வரப்பட உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட சாப்ட்வேரை தடையின்றி செயல்படுத்த காரைக்குடி, தேவகோட்டை தலைமை அஞ்சலாகம் மற்றும் அதன் கீழ் உள்ள அனைத்து துணை மற்றும் கிளை அஞ்சல் அலுவலங்கள் அனைத்திலும் நாளை மட்டும் அஞ்சலக மற்றும் ஆதார் சேவைகள் அனைத்தும் வழங்கப்பட மாட்டாது. எனவே பொதுமக்கள் தங்களின் தபால் மற்றும் நிதி சார்ந்த தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
+
Advertisement