சிவகங்கை, டிச.5: சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு திராவிடர் கழகம் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.ரவியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர் இன்பலாதன், மாவட்ட செயலாளர் ராஜாராம் முன்னலை வகித்தனர். திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் தமிழ்பிரியா கண்டன உரையாற்றினார்.
இதில் திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் தங்கராசு, வேம்பத்தூர் ஜெயராமன், மாவட்ட அமைப்பாளர் அனந்தவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்தி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் புஷ்பவள்ளி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ராஜாங்கம் பேசினர். திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், துணை அமைப்பாளர் மார்க்கரேட்கமலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

