சிவகங்கை, செப். 30: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் உரத்துப்பட்டியை சேர்ந்த கிராமத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உரத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 6 மாதங்களில் இதுவரை சுமார் 8க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
அதில், ஒரே நாளில் 5 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. 30 பவுன் தங்க நகைகள், சுமார் 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் மதிப்பிலான பித்தளைப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசில் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.