சாயல்குடி, அக்.29: முதுகுளத்தூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு நேற்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாகச் சென்று தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் அக்.28ம் தேதி ஆன்மீக விழாவும் , 29ம் தேதி அரசியல் விழாவாகவும், 30ம் தேதி அரசு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் மருத்துவர் ராம்குமார் பாண்டியன் தலைமையில், செயலாளர் குணா, பொருளாளர் சொக்கலிங்கம் ஆகியோரது முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், முத்துராமலிங்கத் தேவர் சிலை முன்பாக வளர்க்கப்பட்ட யாகத்தில் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தனர்.
