தொண்டி, ஜூலை 29: விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்வதற்கு விதைப் பரிசோதனை மிகவும் அவசியம். ஒரு விதையின் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றை மிக துல்லியமாகவும், அதன் வம்சா வழியினை உறுதி செய்யும் விதமாகவும் பரிசோதனை முடிவுகள் இருக்கும். மேலும் விதைப் பரிசோதனை செய்வதால் ஒரு விதையின் திறனை அறிந்து விதையளவு நிர்ணயம் செய்யப்படுகிறது.
குறிப்பிட்டுள்ள விதைத் தரங்களை உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். நல்ல முளைப்புத்திறன் கொண்டு விதைக்கப்படும் விதையின் மூலம் நிறைய பயிர் எண்ணிக்கை கிடைக்கும். மேலும், பயிர்கள் செழித்து வளரும். விதையின் ஈரப்பதம் உள்ளதை பொறுத்தே அவ்விதையின் ஆயுள் நிர்ணயிக்கப்படுகிறது என வேளாண் துறையினர் விளக்கி உள்ளனர்.