தொண்டி,அக்.28: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்று முதல் 5 வார்டுகளுக்கான சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வார்டு வாரியாக சிறப்பு கூட்டம் நடத்தி பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து நேற்று தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்று முதல் ஐந்து வார்டுகளுக்கு பிவிபட்டினம் சமுதாய கூடம், நரிக்குடி, வட்டகேணி அங்கன்வாடி, புதுக்குடி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் குடி தண்ணீர், சாலை வசதி, சாக்கடை கால்வாய் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு மனுக்களை கொடுத்தனர். பேரூராட்சி தலைவி ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், தீபக் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement
