ராமேஸ்வரம், அக்.28: கந்தசஷ்டியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று கந்தசஷ்டியை முன்னிட்டு முருகன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை முருகன், வள்ளி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் கோயில் மேற்குரத வீதியில் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
