பரமக்குடி,நவ.27: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் குறித்த சிறப்பு முகாம் நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. போகலூர் மேற்கு ஒன்றியம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றின் முகாமினை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் புதிய வாக்காளர் சேர்ப்பு, முகவரி மாற்றம் குறித்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து வாக்காளர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.உடன் டி.கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன், வழக்கறிஞர் அணி பரமசிவம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹரிவரசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திருவாடி சண்முகசுந்தரம் மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

