ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில் நிலையம் தெற்கு பகுதியில் உள்ள மல்லிகை நகர் மணல் மேடு பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கட்டுமானம் மற்றும் வியாபார பயன்பாடுக்கு சிறிய வண்டிகளை பயன்படுத்தி சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு பத்து டிராக்டர் அளவுக்கு மணல் திருடப்படுகிறது.
அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கட்டுமான பயன்பாட்டுக்கு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர். டிராக்டரில் ஏற்றி மேலே எம்சாண்ட் மணலை பரப்பி கொண்டு செல்கின்றனர். இதனால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

