தொண்டி, செப்.24: நவராத்திரி விழா தொண்டி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று முன்தினம் இரவு காமாட்சி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உட்பட 12 வகை அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து முப்பெரும் தேவியர், முருகன், ராகவேந்திரர், சாய்பாபா உள்ளிட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வணங்கி சென்றனர். ஒன்பது நாளும் மண்டகபடியார் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதேபோல் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில், சோழியக்குடி செல்லியம்மன் கோயில் உட்பட பல கோயில்களில் நவராத்தியை முன்னிட்டு
கொலு வைக்கப்பட்டுள்ளது.