ராமநாதபுரம், செப்.22: ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 17 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.4550 ஆகும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 22.9.2025 முதல் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும்.
இப்பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 + GST 18% ஆகும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்ச வயது வரம்பு 15 ஆகும் /அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி வகுப்புகள் 15.10.2025 அன்று துவங்கப்படும்.
இப்பயிற்சி பெறுவதனால் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிபீட்டாளராக பணிபுரிய வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும். இப்பயிற்சி தொடர்பான மற்ற விபரங்களை 88254 11649, 95781 63661. ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு ராமநாதபுரம் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜினு தெரிவித்துள்ளார்.