சிவகங்கை, செப்.22: சிவகங்கை கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் சார்பில் சமுதாய வளப்பயிற்றுநர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
சுய உதவிக்குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தல் வேண்டும். மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில், குறைந்தது 5முதல் 10 பயிற்சிகளில் கலந்து கொண்டவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு செப்.25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.