பரமக்குடி,ஆக.19: பரமக்குடியில் முதுகலைத் தமிழாசிரியர் அவையத்தின் இரண்டாம் ஆண்டு முப்பெரும் விழா ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கர்ணன் தலைமை வகித்தார். ஆசிரியை ஜெகதீஸ்வரி வரவேற்றார். ஏஐஏடிஏ ஆசிரியர் அமைப்பின் மாநிலத் தலைவர் தலைமையாசிரியர் பாரதிராஜன் தலைமை வகித்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், மானமதுரை அரசு கல்லூரியின் முதல்வர் பேரா.கோவிந்தன், ஆயிரவைசிய சபையின் தலைவர் பாலுச்சாமி, தாளாளர் சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 91 வயது நிறைவடைந்த மூத்த பேராசிரியர் பொ.ந.கமலாக்கு தொல்காப்பியர் விருதும், முனைவர் தாமரைக்கு திருவள்ளுவர் விருதும் வழங்கப்பட்டது.