மண்டபம்,அக்.12: மண்டபம் பகுதியிலுள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பில் வாங்க கற்றுக் கொள்வோம் தீ பாதுகாப்பு அறிவோம் உயிர் காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் நிலைய அலுவலர் போக்குவரத்து ரமேஷ் பொதுமக்களுக்கு தீயினால் ஏற்படும் விபத்தில் இருந்து பொதுமக்களை மீட்பது, தீயை அணைப்பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தார். முகாமில் மண்டபம், கேம்ப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர்கள்,வீரர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement