ராமநாதபுரம், டிச.11: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 18 பேருக்கு நிலஅளவர், வரைவாளர் பணி நியமன ஆணையை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங்காலோன் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறை சார்பில் நிலஅளவை பதிவேடுகள் துறையில் 2025ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 நிலஅளவர்கள் மற்றும் 3 வரைவாளர்களுக்கான பணிநியமன ஆணையை கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலஅளவை) அண்ணாமலைபரமசிவன் கலந்து கொண்டனர்.


