திருப்புவனம், டிச.9: திருப்புவனம் வடகரை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்கள் செந்தில்குமார்(24), சேரன்(21). நண்பர்களான இவர்களை நேற்று முன்தினம் சிலர் கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பினர். செந்தில்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேரனுக்கு திருப்புவனம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. திருப்புவனம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் முன்விரோதத்தில் வெட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக திருப்புவனம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆதிராஜேஸ்வரன்(26), ஆதிலட்சுமி, ஆதிராஜா(20), செம்பூரை சேர்ந்த சஞ்சய்(19) உட்பட 12 பேரை ேபாலீசார் வழக்கப்பதிந்து கைது செய்தனர். மூன்று டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
+
Advertisement


