சிவகங்கை, டிச.5: கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.1 கோடி செலவில் பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபர்கள், நிறுவனங்களுக்கு தலா ரூ.1லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
2025ம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நல சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்பு, தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விருதுக்குழு மூலம் விருது பெறுபவர்களை தேர்ந்தெடுக்கும். இதற்கான விண்ணப்பங்களை www.tnpcb.gov.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.1.2026ம் தேதிக்குள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். கூடுதல் விபரம் அறிய மேற்கண்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

