Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கரை ஓரங்களில் மீன்பிடிப்பால் பிரச்னை: மரைன் போலீசார் சமரசம்

தொண்டி, ஆக.4: தொண்டி அருகே நம்புதாளையில் விசைப்படகு மீனவர்கள் கரை ஓரங்களில் மீன் பிடித்ததால் நாட்டு படகு மீனவர்களுடன் பிரச்னை ஏற்பட்டதால் மரைன் போலீசார் சமரசப்படுத்தினர். விசைப்படகு மீனவர்கள் கடலில் ஆழப் பகுதியில் மீன் பிடிக்க வேண்டும் என்பது விதி. மேலும் இரட்டைமடி, சுருக்கு மடி இழுவை வலை போன்றவற்றை பயன் மீன் பிடிக்க கூடாது. இருப்பினும் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் விதிமுறை மீறுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் கரை ஒரங்களில் மீன் பிடிக்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மரைன் போலீசார் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தனர். இந்நிலையில் நேற்று சோழியக்குடி லாஞ்சியடி பகுதி விசைப்படகு மீனவர்கள் சிலர் கரை ஒரங்களில் இழுவை வலையை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். இதை பார்த்த நம்புதாளை மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். இதனால் இரு தரப்பு மீனவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மரைன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.