Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்புவனம் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

திருப்புவனம்: திருப்புவனம் புஸ்பவனேஸ்வரர் செளந்தரநாயகி அம்பாள் கோயில் சிவகங்கை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்து வருகிறது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் தேவஸ்தானம் மற்றும் கிராமப் பொதுமக்கள் நடத்துவதற்கு முடிவு செய்து கடந்த ஜூலை 7ம் தேதி பாலாலய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோயில் ராஜகோபுர திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

கோபுரத்தில் சேதமான சுதை சிற்பங்களை புனரமைப்பு செய்வதற்காக சவுக்கு மரங்களால் சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கே உள்ள புண்ணிய ஸ்தலமான காசியை விட அதிகம் புண்ணியம் தரும் புண்ணியஸ்தலம் புஸ்பவனக் காசி என்று அழைக்கப்படும் பெருமை பெற்றது திருப்புவனம் தலமாகும்.

காசிக்கு செல்ல முடியாதவர்கள் பலரும் திருப்புவனம் வந்து முன்னோர்களின் அஸ்தியை கரைத்து புஸ்பவனேஸ்வரர் செளந்தரநாயகி அம்பாளை வழிபட்டு செல்கின்றனர். அப்பர், சுந்தரர், சம்பந்தர், நாவுக்கரசர் கருவூர்த் தேவர் ஆகியோரின் பாடல் பெற்ற ஸ்தலமான இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 2002ம் ஆண்டு நடந்தது.

பொதுவாக 13 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் 23 வருடங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என பக்தர்கள் கவலை தெரிவித்தனர். கும்பாபிஷேக திருப்பணிகளை தொடங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகம் மற்று திருப்பணி ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.