திருவாடானை, செப்.2: திருவாடானை அருகே திருவடிமிதியூர் கிராமத்தைச் சேர்ந்த சேசுராசய்யா மகன் பிரான்சிஸ் செழியன்(25). இவர், சென்னையில் ஐடி நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் பிரான்சிஸ் செழியன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்குச் சென்ற திருவாடானை போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement