பொன்னமரவாதி, செப்.16: பொன்னமராவதி பகுதியில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தலைமை அறிவித்தபடி உறுதி மொழி எடுக்கப்பட்டது. பொன்னமராவதி தெற்கு ஒன்றியத்தில் உள்ள வேந்தன்பட்டி, அம்மன்குறிச்சி, தூத்தூர்,ஆலவயல், கொப்பனாபட்டி உட்பட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தெற்கு ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பொன்னமராவதி பேரூராட்சிப்பகுதியில் உள்ள பொன்.புதுப்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி, வலையபட்டி பழனியப்பா தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நகரச்செயலாளர் அழகப்பன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.