Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அறந்தாங்கி அருகே சிலட்டூர் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

அறந்தாங்கி, அக். 14: அறந்தாங்கி அருகே சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 3 புதிய வகுப்பறை கட்டிம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சிலட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் 3 புதிய வகுப்பறை கட்டடம் அமைக்கும் பணிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழச்சியில் அறந்தாங்கி கோட்டாச்சியர் அபினயா, வட்டாச்சியர் கருப்பையா, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.