புதுக்கோட்டை, அக். 7:புதுக்கோட்டை அருகே சின்னையாசத்திரத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. விவசாயி. இவர். தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவானது வேறு பெயரில் உள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றி தருமாறு வருவாய்த்துறை அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்.அருணா தலைமையில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் செல்வமணி மனு அளிக்க வந்துள்ளார். அப்போது, மனு அளிக்கும் இடத்தில் திடீரெரன பையில் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்து தீ குளிக்க முயன்றுள்ளார். உடடியாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதுபோல் செய்தால் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி அனுப்பிவைக்கப்பட்டார்.