அறந்தாங்கி, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனத்தார் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் ரமேஷ் நீர்வளத்துறை அலுவலகத்தில் மனு அளித்தார். திருச்சி நீர்வளத்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளர் சிவக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கி உள்ளார்.அந்த மனுவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லன்ணைகால்வாய் வழியாக 168 ஏரி வாயிலாக 32 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று உள்ள நிலையில் நாகுடி நீர்வளதுறை அலுவலகத்தில் பாசன உதவியாளர்கள் 12 பேர் இருந்த நிலையில் தற்போது 1 ஒருவர் மட்டுமே பாசன உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
நாகுடி பகுதியில் 5 வாய்கால் உள்ள நிலையில் ஒவ்வொரு வாய்காலும் 10கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் ஒரு வாய்காலுக்கு 2பாசன உதவியாளர்கள் இருந்தால்தான் கடைசி பகுதி வரைக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியும் எனவே காலதாமதம் செய்யாமல் பாசன உதவியாளர்கள் நியமனம் செய்யவேண்டும். காலதாமதம் செய்தால் கடைசி வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆகையால் பாசன உதவியாளர் நியமனம் செய்து கல்லன்ணைகால்வாய் பாசன விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு உள்ளது.