Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வேளாண் விவசாயிகள் கடலை பயிருக்கு காப்பீடு செய்ய 31ம் தேதி கடைசி

விராலிமலை,ஜூலை 29: காரீப் பருவத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விராலிமலை வட்டாரம் சார்ந்த வேளாண் விவசாயிகள் ”பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா” பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களது பயிர்களை பயிர் காப்பீடு செய்து இயற்கைப் பேரிடர்களில் இருந்து நிவாரணம் பெறலாம். என்று விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ப.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். விராலிமலை வட்டாரம் கொடும்பாளூர் சரகத்தில் 2 ( தென்னம்பாடி, மீனவேலி)வருவாய் கிராமம், விராலிமலை சரகத்தில் 5 (கத்தலூர், அக்கநாயக்கன்பட்டி, முல்லையூர், வடுகபட்டி,பூதகுடி)வருவாய் கிராமம், மாத்தூர் சரகத்தில் 6( களமாவூர், பாலண்டாம்பட்டி, சிங்கத்தாகுறிச்சி, தென்னதிரையன்பட்டி,லட்சுமணம்பட்டி, மாத்தூர்) வருவாய் கிராமம், நீர் பழனி சரகத்தில் 3(வெம்மணி, பேராம்பூர்,ஆலங்குடி) வருவாய் கிராமங்களுக்கான. காரீப் பருவ நிலக்கடலை பயிருக்கு காப்பீடு திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது,

ஏக்கருக்கு பயிர் காப்பீடு நிவாரணத் தொகையாக ரூ.28,800 அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு பிரீமியம் தொகை ரூ.576 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே அறிக்கை செய்யப்பட்ட 16 வருவாய் கிராமங்களில், காரீப் நிலக்கடலை பயிர்களை சாகுபடி செய்துள்ள. வேளாண் பெருமக்கள் தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட பிஏசிசிஎஸ், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுச் சேவை மையங்களை நேரில் அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வரும் ஜூலை 31 தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயனடைந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு தங்களது பகுதி வேளாண் விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். நீர்ப்பழனி, மாத்தூர் சரக விவசாயிகள் தொடர்புக்கு உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணசாமி 9790514230, விராலிமலை, கொடும்பாளூர் சரக விவசாயிகள் பர்கானாபேகம் 9655493621, பூதகுடி சரக விவசாயிகள் அருண்மொழி 6385288651 ஆகியோரை தொடர்பு கொண்டு மேலும் தெரிந்து கொள்ளலாம்.