Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திருக்களம்பூர் மதகடி கருப்பர் கோயில் விழாவில் அரிவாளில் ஏறி குறி சொல்லிய சாமியாடி

பொன்னமராவதி, ஆக. 3: பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் மதகடி கருப்பர் கோயில் விழாவில் சாமியாடிகள் நீண்ட தூரம் அரிவாளில் ஏறி நின்று சாமியாடி காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் மதகடி கருப்பர் கோயிலில் ஆடி பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதகடி கருப்பர் சாமியாடி, வீரபத்திரர் சாமியாடி, சின்ன கருப்புசாமியாடி, செங்கிடாய்கருப்பர் சாமியாடி உள்ளிட்ட சாமியாடிகள், சாமியாடி ஊரை வலம் வந்தனர்.

தொடர்ந்து, கதலிவனேஸ்வரர் ஆலயத்தில் இருந்து தெருவாசக்கூடம் என்று சொல்லக்கூடிய இடம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் தங்கள் கரங்களில் அரிவாள் பிடித்துக் கொள்ள. மதகடி கருப்பர் சாமி ஆடிய சாமியாடி. அந்த அரிவாள்கள் மீது ஏறி நடந்து வருகிற காட்சி பக்தர்கள் மத்தியில் பக்தி பரவசம் ஊட்டும் வகையில் அமைந்திருந்தது. இதில் கிராமப் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டு சாமியை. வணங்கி வழிபட்டனர்.தொடர்ந்து கிராமத்து பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடினர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு ,கோழி ஆகியவற்றையும் நேர்த்திக்கடனாக செலுத்தி பொங்கல் வைத்து கொண்டாடினர்.