Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பொன்னமராவதியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதி, ஆக. 3: பொன்னமராவதியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொன்.புதுப்பட்டியில் தொடங்கிய பேரணிக்கு ரோட்டரி சங்கத்தலைவர் சுதாகரன் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி மாவட்ட செயலாளர் குமரப்பன், டாக்டர் அழகேசன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.பொன்.புதுப்பட்டி வர்த்தகர் கழக மஹால் முன்ப தொடங்கிய பேரணி நகைக்கடை பஜார், அண்ணாசாலை, பேரூந்து நிலையம் வழியாக சென்று காவல் நிலையம் அருகில் முடிந்தது.

இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பாதகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் சென்றனர். இந்த பேரணியில் நிர்வாகிகள் ராமன், சரவணன்,குமாரசாமி,முரளிதரன், ராஜா,டாக்டர் செல்வக்குமார்,சுகதேவ்,மணிகண்டன், மலைச்சாமி, பேராசிரியர்கள் அழகம்மை, முடியரசன், ராஜா உட்படபலர் கலந்துகொண்டனர்.இதில் பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம், பொன்னமராவதி துர்கா மருத்துவமனை, துர்கா செவிலியர் கல்லூரி மற்றும் மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.