புதுக்கோட்டை வருவாய் கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம்: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜூலை 24: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் விவசாயிகளின் தேவைகளை பெற உதவும் ”உழவரைத் தேடி- வேளாண்மை உழவர் நலத்துறை” திட்ட முகாம் வருகிற 25ம் தேதி நடைபெறுகிறது.இம்முகாமினை பயன்படுத்தி கொள்ளளுமாறு வேளாண்மை இணை இயக்குனர் சங்கரலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிடுள்ள செய்தி குறிப்பில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசால் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் ”உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” என்ற திட்டம் கடந்த 29.5.2025 அன்று முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான முகாம்கள் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான முதலாவது முகாம் 26 வருவாய் கிராமங்களில் கடந்த 11.7.2025 அன்று நடத்தப்பட்டது. தற்போது ஜூலை -2025 மாத இரண்டாவது முகாம் வரும் 25.7.2025 அன்று கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.
அதாவது, வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் வண்ணாரப்பட்டி, முதுகுளம், செரியலூர் ஜமீன் 1 பிட், முதலிப்பட்டி, புதுவாக்கோட்டை, பழங்குளம், சிங்கவனம், பிலிவலம், சிராயம்பட்டி, கொன்னையூர், ஆரியூர், சிங்கத்தாகுறிச்சி, உலககாத்தான்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களிலும், தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் வாராப்பூர், துவார், ஆலங்குடி, கரு.கீழத்தெரு, ஆயிங்குடி, சிவந்தான்காடு, கடம்பர்கோவில், வண்ணியுலந்தான்வயல், தேக்காட்டூர். மூலங்குடி, திருநல்லூர், தென்னதிராயன்பட்டி, குன்னண்டார்கோவில் ஆகிய வருவாய் கிராமங்களில் நடைபெற உள்ளது.
எனவே, மேற்கண்ட வருவாய் கிராம விவசாயிகள் காலை 10 மணியளவில் நடைபெறும் உழவரைத்தேடி வேளாண்மை நலத்துறை முகாம்களில் தவறாது கலந்துகொண்டு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், உழவர் நலன் சார்ந்த வேளாண் திட்டங்கள் ஆகியவற்றை பெற்று பயனடையுமாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் சங்கரலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.