பொன்னமராவதி,நவ.15: புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் படி பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு நேற்று காரைக்குடியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் கேடயம் வழங்கினார்கள.
மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பார்த்தசாரதி மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர்ஆசிரியர்கழக நிர்வாகிகள், சேவை சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
