பொன்னமராவதி,நவ.15: பொன்னமராவதி அருகே கேசராபட்டி பள்ளியில் குழந்தை தின விழா மற்றும் பாத பூஜை விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி சிடி சர்வதேச பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு உலகம் தொடக்கவிழா மற்றும் பாத பூஜை விழா நடைபெற்றது. குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி நிறுவனர் சிதம்பரம் தலைமைவகித்தார். பள்ளி தாளாளர் அன்னம் சிதம்பரம் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டு உலகத்தை பொன்னமராவதி பேரூராட்சித்தலைவர் சுந்தரிஅழகப்பன் திறந்துவைத்தார்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், பேரூராட்சித் தலைவர் சுந்தரி, நகரச்செயலாளர் அழகப்பன், முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் மாரிமுத்து, சோலையப்பன், முருகேசன், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் சேகர், ரோட்டரி சங்கத்தலைவர் சுதாகரன், ஆகியோர் பரிசு வழங்கிப்பேசினார்கள். செயல்அலுவலர் சந்திரன் தொகுத்து வழங்கினார். இதனைத்தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
