அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு திமுக கூட்டணியினர் எதிர்ப்பு
புதுக்கோட்டை, அக்.31: இந்திய தேர்தல் ஆணையமும் செயல்படுத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் பணிக்கு திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய பாஜ எதிராக கோஷம் எழுப்பினர். ஒன்றிய பாஜகவும் மற்றும் இந்திய தேர்தல் ஆணையமும் தமிழ்நாட்டில் அரங்கேற்ற துடிக்கும் எஸ்ஐஆர் எனும் சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது.
திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைங்கிணங்க புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர். செல்லபாண்டியன் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் , பிரதிநிதிகள் எஸ்ஐஆர் எனும் சிறப்பு வாக்காளர் திருத்தம் வேண்டாம் என்று பதாகைகளுடன், இக்கூட்டத்தில் பங்கேற்று எஸ்ஐஆர் எனும் வாக்குரிமை பறிப்பு சதிக்கு எதிராக குரல் எழுப்பினர்.
 
  
  
  
   
