பொன்னமராவதி, அக்.30: பொன்னமராவதியில் சலவை தொழிலாளருக்கு இலவச சலவை பெட்டி வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சிட்டி லைன்ஸ் சங்கத்தின் சார்பில் பொன் புதுப்பட்டியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி பாலு என்பவர்க்கு 8000 ரூபாய் மதிப்புள்ள சலவைப் பெட்டியினை தலைவர் மகாலிங்கம் தலைமையில் செயலாளர் ஜெய்சங்கர் பொருளாளர் முருகேசன் முன்னிலையிலும் வழங்கப்பட்டது. இதில் சிட்டி லயன் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் முருகன், செல்வம், சுனில் ராஜ், பாண்டி,குமார் நாகராஜன், அடைக்கப்பன், கௌதம், தனாஜ், மகேஷ், ஹனிபா, பாலசுப்பிர்மணியன், பாலமுர்ளி மற்றும் நிர்வாகிகள் உட்படபலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement
